2015-01-23 16:42:00

இந்தியாவில் பாலின வேறுபாடுகளை களைவதற்கு புதிய முயற்சி


சன.23,2015. இந்தியாவில் பாலின சமத்துவமின்மையைக் களைவதற்குப் புதிய  முயற்சிகளில் இறங்கியுள்ளது இந்திய அரசு.

நாட்டில் பெண் சிசுக்கொலைகள், பெண் கருக்கொலைகள் உள்ளிட்ட சிறுமிகளுக்கு எதிரான பரவலான ஒருதலைச் சார்பான நடவடிக்கைகளை தடுப்பதற்கான புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்த நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சிறுமிகளைக் குறைத்து மதிப்பிடும் பழைய போக்குகள் நீக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் பாலின சமத்துவமின்மை தொடர்பான நடவடிக்கைகளால் ஒவ்வொரு 1000 ஆண் குழந்தைகளுக்கும் 918 பெண்குழந்தைகளே பிறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. கணித்துள்ளது.

2011ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் கடந்த 30 ஆண்டுகளில் 120 இலட்சம் பெண் சிசுக்கள் கருவிலேயே கலைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, சீனாவில் 2014ம் ஆண்டில் பெண்களைவிட ஆண்கள் 3 கோடியே 30 இலட்சம் ஆண்கள் அதிகமாக இருந்தனர் என ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : Agencies/வத்திக்கான் வானொலி          








All the contents on this site are copyrighted ©.