2015-01-23 16:47:00

சட்டவிரோதமாக மீன்பிடிப்பதைக் கண்டுபிடிக்க தொழில்நுட்பம்


சன.23,2015. உலகெங்கிலும் ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி டாலர் பெறுமான சட்டவிரோத மீன்பிடித் தொழில் நடப்பதாகச் சொல்லப்படும்வேளை, இதனைத் தடுப்பதற்கு நவீன வழிமுறை ஒன்றை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

செய்மதி தரவுகளையும் ஏனைய தரவுகளையும் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய தொழிநுட்பம் மீன்பிடி படகுகளைக் கண்காணிப்பதற்கு உதவக்கூடும் என்று நம்பப்படுகின்றது.

கடலில் சந்தேகத்துக்கிடமான நடமாட்டங்கள் தென்படுகின்றபோது இந்தத் தொழிநுட்பம் எச்சரிக்கை ஒலியை எழுப்பக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடலின் கள நிலைமைகளையும் மீன்வளங்கள் இருக்கக்கூடிய இடங்களையும் ஆராய்வதன்மூலம், குறிப்பிட்ட பகுதிகளில் படகுகள் என்ன நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன என்பதைக் கணிக்க முடியும் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

தென் அமெரிக்காவின் சிலே நாட்டிலும் பசிபிக் தீவான பலாவ் குடியரசிலும் இந்தத் தொழிநுட்பம் முதலில் நடைமுறைக்கு வரவுள்ளது.

ஆதாரம் : பிபிசி/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.