2015-02-16 16:40:00

இலங்கையில் அனைத்து இனத்தவருக்கும் சமநீதி-Amnesty Int.அழைப்பு


பிப்.16,2015 இலங்கையில் புதிதாக அமைந்துள்ள அரசு, அந்நாட்டின் அனைத்து இனத்தவர்களுக்கும் சமநீதி கிடைக்கவும், அவர்களிடையே நம்பிக்கையை உருவாக்கவும் உழைக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது, Amnesty International எனும் மனித உரிமைகள் அமைப்பின் இந்தியப் பிரிவு.

இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா அவர்கள், 4 நாள் பயணமாக இந்தியா சென்றுள்ள இவ்வேளையில், இவ்வழைப்பை முன்வைத்துள்ள Amnesty International அமைப்பு, இலங்கையில் சுதந்திரம், சம உரிமை, சுய மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில், மறுசீரமைப்புப் பணிகளை, புதிய அரசு மேற்கொண்டு, மக்களிடையே நம்பிக்கையை உருவாக்க உழைக்கவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளது.

விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரசு மேற்கொண்ட இறுதிக் கட்டப் போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் உண்மையானதாகவும், நம்பிக்கைக்கு உரியதாகவும் இருப்பதுடன், இம்மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா.வின் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இருக்கவேண்டும் என்று Amnesty International மனித உரிமைகள் அமைப்பின் இந்தியப் பிரிவு விண்ணப்பித்துள்ளது. 

ஆதாரம் : TamilWin / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.