2015-02-28 15:59:00

உலக அபூர்வ நோய்கள் தினம் – பிப்ரவரி 28


பிப்.28,2015. அபூர்வ நோய்களுக்கான சிகிச்சையும், அந்நோய்கள் குறித்த ஆராய்ச்சிகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று பென்சில்வேனிய பல்கலைக்கழக கைவிடப்பட்டநோய் ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

பிப்ரவரி 28, இச்சனிக்கிழமையன்று உலக அபூர்வ நோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு இவ்வாறு கேட்டுக்கொண்ட இம்மையம், அறிவியலாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், இந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் கேட்டுள்ளது.

கைவிடப்பட்ட நோய்கள் என்று கூறப்படும் அபூர்வ நோய்களால் அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் இரண்டு கோடியே ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏதாவது ஓர் அபூர்வ நோயால் குறைந்தது இரண்டு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் பல நோய்கள் பிறப்பிலேயே வருபவை. இந்நோய்களால் ஏறக்குறைய 30 விழுக்காட்டுச் சிறார் 5 வயதுக்குள்ளே இறந்து விடுகின்றனர்.

பிறவிப் பார்வையின்மை, கல்லீரல் பிரச்சனை, Duchenne Muscular Dystrophy போன்ற நோய்களைப் பட்டியலிட்டுள்ளது பென்சில்வேனிய ஆய்வு மையம்.

ஆதாரம் : Agencies /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.