2015-02-28 14:09:00

கடுகு சிறுத்தாலும் - உலகை மாற்றும் வரம் தா!


Sufi என்ற ஆழ்நிலை தியானவழியில் சிறந்த Bayazid Bastami அவர்கள், தன் வாழ்வில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களை இவ்வாறு விவரித்துள்ளார்: புரட்சிகளை அதிகம் விரும்பிய இளைஞனாய் நான் இருந்தபோது, "கடவுளே, உலகை மாற்றும் வரம் தா!" என்று இறைவனிடம் வேண்டினேன். நடுத்தர வயதை அடைந்தபோது, என் செபம் சிறிது மாறியது: "கடவுளே, என் குடும்பத்தினரை, நண்பர்களை, என்னைச் சுற்றியுள்ளவர்களை மாற்றும் வரம் தா!" என்பது என் செபமானது. இப்போது வயது முதிர்ந்த நிலையில், என் இறுதி நாட்கள் எண்ணப்பட்டுள்ளன என்பதை உணர்கிறேன். இப்போது நான் வேண்டுவது ஒன்றே... "கடவுளே, என்னையே நான் மாற்றிக்கொள்ளும் வரம்தா!" என்பதே என் இப்போதையச் செபம். இந்த செபத்தை நான் ஆரம்பத்திலிருந்தே வேண்டியிருந்தால், என் வாழ்வு எவ்வளவோ மாறியிருக்கும். என்னைச் சுற்றியிருந்தவர்கள் மாறியிருப்பர். இந்த உலகமும் மாறியிருக்கும்.

"உலகில் நீ காண விழையும் மாற்றம் உன்னிடம் முதலில் துவங்கவேண்டும்" என்று சொன்னவர் மகாத்மா காந்தி. மாற்றங்களின் ஆரம்பம்... உலகமா, உள்ளமா?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.