2015-03-27 15:06:00

கடுகு சிறுத்தாலும்...: பெறுவதைவிட கொடுப்பதே இன்பம்


தன் விலையுயர்ந்த காரை ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதைப் பார்த்தார், அந்த வண்டியின் உரிமையாளர். அச்சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர், சிறுவனை உட்காரவைத்து சிறிது தூரம் ஓட்டினார்.

‘உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது, என்ன விலை’ என்று சிறுவன் கேட்டான். அவரோ, 'தெரியவில்லை தம்பி, இது என் சகோதரன் எனக்குப் பரிசளித்தது' என்றார்.

'அப்படியா! அவர் மிகவும் நல்லவர்' என சிறுவன் சொல்ல, வண்டி உரிமையாளரோ, 'நீ என்ன  நினைக்கிறாய் என எனக்குத் தெரியும். உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா?' என்றார்.

சிறுவன் சொன்னான், ‘இல்லை, நான் உங்களின் சகோதரனைப்போல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்’ என்று.

கொடுப்பதில் கிட்டும் இன்பம், பெரும்பாலும், பெறுவதில் இருப்பதில்லை. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.