2015-04-24 16:14:00

எல்லாச் சூழல்களும் சம வாய்ப்புக்களை வழங்குவதில்லை


ஏப்.24,2015. “வளர்ச்சிக்கு நிதியுதவி செய்வதற்கும், 2015ம் ஆண்டுக்குப் பிறகு இடம்பெறும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் இடையேயுள்ள உறவுகள்” குறித்து ஐ.நா.வில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வியாழனன்று உரையாற்றிய பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள், மனிதரின் வளர்ச்சிக்கு எல்லாச் சூழல்களும் சம வாய்ப்புக்களை வழங்குவதில்லை என்று தெரிவித்தார்.

உலக சமுதாயம், 2015ம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கும்போது, மில்லென்ய வளர்ச்சித் திட்டங்களில் கிடைத்த அனுபவங்களிலிருந்து கிடைத்த பாடத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று திருப்பீடம் விரும்புவதாகத் தெரிவித்தார் பேராயர் அவுசா.

மனிதர் வாழ்கின்ற வளர்ச்சிச் சூழல்களில் மனிதரின் மாண்பு விளக்கப்படவில்லை எனினும், மனிதரின் வளமைக்கு எல்லாச் சூழல்களும் சம வாய்ப்புக்களை வழங்குவதில்லை என்றும் கூறினார் பேராயர் அவுசா.

அனைவரும் தங்களின் முழுத் திறமைகளையும் அடைவதற்குரிய வாயப்புகளைக் கொண்டிருப்பதற்கு, 2015ம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய நம் விவாதங்களில் இடமளிக்க வேண்டியது நமது கடமை என்பதையும் பேராயர் சுட்டிக் காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.