2015-05-08 15:58:00

போதைப்பொருள் வர்த்தகம் ஒழிக்கப்படுமாறு ஐ.நா. வலியுறுத்தல்


மே,08,2015. நாடுகளுக்கு இடையே இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகமும், அது தொடர்புடைய குற்றங்களும் ஒழிக்கப்படுமாறு ஐ.நா. அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த ஆண்டில் நடைபெறும் ஐ.நா. பொது அவை அமர்வில் போதைப்பொருள் பிரச்சனை குறித்து சிறப்பாக விவாதிக்கப்படவிருப்பதால், போதைப்பொருளை ஒழிப்பதற்குப் பன்னாட்டுச் சமுதாயத்துக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளதாகவும் கூறினார் ஐ.நா. உதவி பொதுச் செயலர் யான் எலியாசன்.

ஐ.ந. போதைப்பொருள் கட்டுப்பாட்டு நிறுவனம் வெளியிட்ட அண்மை அறிக்கையின்படி, ஆப்கானில் உற்பத்தியாகும் ஹெராயின் போதைப்பொருள், ஓசியானியா, தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளின் புதிய சந்தைகளில் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன என்று தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் வர்த்தகத்தால் ஆண்டுக்கு 32,200 கோடி டாலர் பெறுமான அளவு, சமூகங்களிலும், அரசுகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் பாதிப்பு ஏற்படுகின்றது என ஐ.நா. கூறுகிறது.    

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.