2015-05-23 16:02:00

ரமாடி மாவட்ட மக்களின் துன்பநிலை குறித்து ஐ.நா. கவலை


மே,23,2015. ஈராக்கின் Ramadi நகரை ஐ.எஸ். இஸ்லாமிய அரசு கைப்பற்றியிருப்பதால், Ramadi மாவட்டத்தில் கடும் சண்டை நடந்துவருவதையொட்டி அப்பகுதியை விட்டு வெளியேறி வரும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உணவு உதவிக்காக விண்ணப்பித்துள்ளது ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பு.

ஒரு நாளில் மட்டும் 25 ஆயிரம் மக்கள் ரமாடி நகரை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும், 2014ம் ஆண்டில் ஈராக்கிலிருந்து 18 இலட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர் என்றும் அவ்வமைப்பு கூறியது.

ரமாடி மாவட்டத்திலிருந்து புலம்பெயரும் மக்கள் பாக்தாத் நகருக்குள் நுழைவது தடுக்கப்பட்டதால், பாக்தாத் நகரின் நுழைவாயிலில் உள்ள ஒரு பாலத்தில், பெண்களும், முதியவர்களும் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளனர் எனவும், உடலில் நீர் குறைந்ததன் காரணமாக சில குழந்தைகள் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இஸ்லாமிய அரசுக்கும், அவர்களுக்கு எதிராக தாக்குதலை ஆரம்பிக்கவுள்ள அரசு ஆதரவுப் படைகளுக்கும் இடையில் அகப்பட்டுள்ள ஏனைய மக்களின் நிலை மிகவும் கவலை தருவதாகவும் உள்ளது.

இதற்கிடையே, ஈராக்குக்கும், சிரியாவுக்கும் இடையில், அரசின் கட்டுப்பாட்டிலிருந்த கடைசி எல்லையையும் இஸ்லாமிய அரசு கைப்பற்றியுள்ளது. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.