2015-07-02 14:16:00

கடுகு சிறுத்தாலும் : ஒன்றில் இறங்கினால் அதிலேயே முழு ஈடுபாடு


மாவீரர் நெப்போலியன் தன் அமைச்சரவை சகாக்களுடன் ஒரு விருந்தில் கலந்துகொண்டார். விருந்தில் எல்லோருக்கும் பழச்சாறு பரிமாறப்பட்டது. குடிக்கத் தொடங்கும் சமயத்தில் ஒரு மாபெரும் சத்தம் அனைவரின் காதுகளையும் துளைத்து திடுக்கிட வைத்தது. நெப்போலியனைத் தவிர மற்ற அனைவரும் பதறி, பழச்சாறைக் கொட்டிவிட்டார்கள். நெப்போலியன் மட்டும் எவ்வித மாற்றமும் இன்றி அமைதியாகப் பழச்சாற்றை ருசித்துக் கொண்டிருந்தார். இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இது எப்படி என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு, ''பழச்சாற்றை அருந்தத் துவங்கி செயலில் இறங்கிவிட்டால், அடுத்த சிந்தனை கூடாது. நாம் மேற்கொள்ளும் காரியம் அருந்துதல் மட்டுமே. அதில், முழுமையான ஈடுபாடு இருந்தால் மட்டுமே காரியம் கைநழுவாது. முழுமையான ருசியும் கிடைக்கும்.'' என்று விளக்கமளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.