2015-07-02 15:50:00

மருத்துவர்கள் நேர்மையோடு பணியாற்ற பங்களாதேஷ் ஆயர் அழைப்பு


ஜூலை,02,2015. மருத்துவர்கள், தாதியர் மற்றும் நலவாழ்வுப் பணியாற்றும் அனைவரும் நோயாளிகளின் நோய்க்கு உடலளவில் மட்டும் சிகிச்சை அளிக்காது, அவர்களின் ஆன்மீக நலனிலும் அக்கறை காட்டுமாறு கேட்டுக்கொண்டார் பங்களாதேஷ் காரித்தாஸ் நிறுவனத் தலைவர் ஆயர் Gervas Rozario.

“மருத்துவ சிகிச்சையை மேம்படுத்தலும், மருத்துவக் கல்வியும்” என்ற தலைப்பில் பங்களாதேஷ் காரித்தாஸ் நடத்திய மூன்று நாள் கருத்தரங்கில் உரையாற்றிய Rajshahi ஆயர் Rozario அவர்கள், மருத்துவர்கள் நேர்மையோடு பணியாற்றுமாறு வலியுறுத்தினார்.

மருத்துவர்கள் நோயாளிகளுக்கு நேர்மையோடு சிகிச்சை அளிக்குமாறும், கூடுமானவரை சிறந்த சிகிச்சையை வழங்குமாறும் கூறினார் ஆயர் Rozario.

பங்களாதேஷின் 70 கத்தோலிக்க நலவாழ்வு அமைப்புகளில் நூறு மருத்துவர்களும், ஆயிரம் தாதியரும் உள்ளனர்.

ஆதாரம் :AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.