2015-07-03 14:40:00

உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கு கூட்டுமுயற்சி அவசியம்


ஜூலை,03,2015. திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையும், CIDSE கத்தோலிக்க அரசு-சாரா அமைப்பும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய சொற்பொழிவாளர்கள், அரசியலில் மக்களாட்சி திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

உலகில் வறுமையை ஒழிப்பதற்கும், நச்சுகலந்த வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் உலகினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கை மிகவும் தேவைப்படுகின்றது என்றும் அப்பேச்சாளர்கள் வலியுறுத்தினர்.

காலநிலை மாற்றம் குறித்து வருகிற டிசம்பரில் நடைபெறவிருக்கும் உலக மாநாட்டில் கலந்துகொள்ளும் நாடுகளின் தலைவர்கள், இவ்விவகாரங்களில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பேச்சாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

கத்தோலிக்கராகிய நாம் தனியாக நின்று, வெப்பநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு செயல்பட முடியாது, மாறாக, இதற்கு அனைத்து மதத்தினர் மற்றும் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினார் CIDSE பொதுச் செயலர் Bernd Nilles.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.