2015-07-03 10:57:00

கடுகு சிறுத்தாலும்...: வீண் புகழ்ச்சி, ஆபத்தின் அறிகுறி


தன் முன்னால் வந்து நின்ற ஓநாயைக் கோபமாக பார்த்து தன் முட்களைச் சிலிர்த்து நின்றது முள்ளம்பன்றி. ஓநாய் உடனே பதற்றத்துடன், ‘பயப்படாதே முள்ளம்பன்றி, உன் அழகை இரசிக்கத்தான் வந்திருக்கேன்’ என்றது. ‘என்னது? நான் அழகா?’ என முள்ளம்பன்றி கேட்க, ‘ஆமாம். நீ நல்ல அழகு. ஆனா உன் உடம்புல இருக்கிற முள்ளுதான் உன் அழகைக் கெடுக்குது’, என்றது ஓநாய்.

‘ஆனா, அதுதானே என்னைப் பாதுகாக்குது’ என்றது முள்ளம்பன்றி. ‘உண்மைதான். ஆனா, அதை எடுத்துட்டினா, நீ இன்னும் அழகாயிடுவே, யாருக்கும் உன்னைக் கொல்லனும்னு மனசே வராது’. ஓநாயின் இந்தப் பசப்பு வார்த்தையில் மயங்கிய முள்ளம்பன்றி, தன் முட்களை எல்லாம் மழித்துவிட்டு ஓநாய் முன் வந்து நின்றது.

‘இப்போ நான் இன்னும் ஆழகாயிருக்கேனா?’ என்று கேட்டது. ‘அழகாய் மட்டும் இல்லை, அடிச்சு சாப்பிடுவதற்கு வசதியாகவும் இருக்கு’, என்றபடி முள்ளம்பன்றி மேலே பாய்ந்தது ஓநாய். 

வீண் புகழ்ச்சி, ஆபத்தின் அறிகுறி 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.