2015-07-03 15:15:00

குடியேற்றதாரர்க்கென தென் கிழக்காசிய நிதியகம் உருவாக்கம்


ஜூலை,03,2015. மியான்மார் மற்றும் பங்களாதேஷ் நாடுகளிலிருந்து வெளியேறியுள்ள ஆயிரக்கணக்கான குடியேற்றதாரர்களின் உடனடி அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு நிதியகத்தை ஏற்படுத்த தென் கிழக்காசிய நாடுகள் இசைவு தெரிவித்துள்ளன.

இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து கடற்கரைகளில் வந்திறங்கியிருக்கும் மக்களைப் பராமரிக்கவும், அவர்களின் உடனடி அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் இந்த நிதியகத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை செலவிடப்படும்.

ஆனால் இக்குடியேற்றதாரர்களின் நலனுக்கு தேவைப்படக்கூடிய நிதியின் அளவு என்று அனைத்துலக உதவி நிறுவனங்கள் கணக்கிட்டிருக்கும் நிதியின் அளவைவிட இந்த நிதியகத்தில் வரவிருக்கும் நிதியின் அளவு என்பது மிகவும் குறைவாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.

மியான்மாரிலிருந்து வெளியேறியுள்ள குடியேற்றதாரர்களில் பெரும்பாலானவர்கள், அந்நாட்டில் கடும் துன்பங்களுக்கு உள்ளான ரோஹிங்க்யா இன முஸ்லிம்கள் என்று கருதப்படுகிறது.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.