2015-07-03 14:56:00

பங்களாதேஷ் Abedக்கு 2015ம் ஆண்டின் உலக உணவு விருது


ஜூலை,03,2015. பங்களாதேஷ் நாட்டில் 15 கோடிக்கு மேற்பட்ட மக்கள் ஏழ்மை நிலையிலிருந்து வெளிவருவதற்கு உதவும் இலாபமில்லா அமைப்பு ஒன்றை உருவாக்கிய அந்நாட்டினர் ஒருவருக்கு, 2015ம் ஆண்டின் உலக உணவு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BRAC என்ற பங்களாதேஷ்  கிராம முன்னேற்றக் குழுவை ஆரம்பித்த அந்நாட்டின் Fazle Hasan Abed அவர்களுக்கு 2015ம் ஆண்டின் உலக உணவு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய ஐந்து இலட்சம் பேர் உயிரிழந்த 1970ம் ஆண்டின் கடும் புயலிலும், 1971ம் ஆண்டில் பாகிஸ்தானிடமிருந்து பங்களாதேஷ் விடுதலையடைந்தபோது ஏற்பட்ட சண்டையிலும் பாதிக்கப்பட்ட மக்கள் மறுவாழ்வு பெற BRAC குழு உதவியுள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் Iowa மாநிலத்தில் Des Moinesல் இயங்கி வரும் இந்த விருது வழங்கும் அமைப்பு, 1986ல் நொபெல் விருது பெற்ற Norman Borlaug அவர்களால் உருவாக்கப்ட்டது. 2,50,000 டாலர் மதிப்பைக் கொண்ட இவ்விருது, வருகிற அக்டோபரில் வழங்கப்படும். 

ஆதாரம் : AP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.