2015-07-25 16:48:00

அமேசான் பகுதியில் சிறார் தொழில்முறையை ஒழிக்க முயற்சி


ஜூலை,25,2015. அமேசான் பகுதியில் சிறார் தொழில்முறையை ஒழிப்பதற்கு பெரு, பிரேசில் ஆகிய இரு நாடுகளும் இணைந்து நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானித்துள்ளன.

பெரு நாட்டில் அமேசான் பருவமழைக் காடுகளை அதிகமாக உள்ளடக்கிய Iquitos நகரத்தில் வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி பெரு, பிரேசில் ஆகிய இரு நாடுகளும் சிறப்பிக்கும் தேசிய விழாவில் அமேசான் பகுதியில் சிறார் தொழில்முறையை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு அதிகமாக கொடுக்கப்படும் என்று Zenit செய்தி நிறுவனம் கூறியது.

இவ்விழாவன்று இவ்விரு நாடுகளின் பிரதிநிதிகளும், அமேசான் பகுதியில் சிறார் தொழில்முறையை ஒழிப்பது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளனர்.   

அனைத்துலக தொழில் நிறுவனத்தின் கணிப்புப்படி, பெரு நாட்டின் அமேசான் பகுதி தங்கச் சுரங்கங்களில் ஏறக்குறைய ஐம்பதாயிரம் சிறார் வரை வேலை செய்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.