2015-07-28 15:30:00

காலநிலை மாற்றம் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டும்


ஜூலை,28,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Laudato si’ திருமடல், இந்தோனேசிய கத்தோலிக்கத் திருஅவை தனது வசதியான நிலையைவிட்டு வெளிவந்து, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஊக்கப்படுத்துகிறது என்று அந்நாட்டு ஆயர் பேரவை கூறியுள்ளது.

இந்தோனேசியாவில் சுற்றுச்சூழல் இயல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று, அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் புலம்பெயர்வோர் ஆணைக்குழுச் செயலர் அருள்பணி Paulus Christian Siswantoko அவர்கள் கூறினார்.

Laudato si’- நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாத்தல் என்ற திருத்தந்தையின் புதிய திருமடல், காலநிலை மாற்றம் குறித்து இந்தோனேசியத் திருஅவை வெளிப்படையாகத் துணிச்சலுடன் பேசவும், நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதற்கு ஒன்றிணைந்த செயல்களில் ஈடுபடவும் நம்மைத் தூண்டுகிறது என்று அருள்பணி Siswantoko அவர்கள் கூறினார்.

சுற்றுச்சூழல் விவகாரத்தில் இந்தோனேசியத் திருஅவை இதுவரை மிகக் குறைவாகவே பேசியுள்ளது என்றும், இந்தோனேசியாவின் Kalimantan, Sumatra மற்றும் Papua பகுதிகளில் வேகமாக வளர்ந்துவரும் வேளாண்மையால் காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார் அருள்பணி Siswantoko.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.