2015-07-28 15:33:00

பிலிப்பைன்ஸ் அரசுத்தலைவர் Aquino நிர்வாகம் மீது குறை


ஜூலை,28,2015. 2016ம் ஆண்டில் பதவிக்காலத்தை நிறைவு செய்யும் பிலிப்பைன்ஸ் அரசுத்தலைவர் Benigno Aquino அவர்களின் நிர்வாகம், திட்டமிட்ட ஊழலைத் தடுக்கத் தவறியுள்ளது என்று குறை கூறியுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள். 

நன்னெறிக்குப் புறம்பான சட்டங்களுக்கு ஆதரவளித்து, ஏழ்மையிலிருந்து ஏழைகளை வெளிவரச் செய்ய இயலாமல் அரசுத்தலைவர் Aquino அவர்களின் நிர்வாகம் கறைபடிந்துள்ளது என்று பிலிப்பைன்ஸ் ஆயர்கள் கூறியுள்ளனர்.

நாட்டின் தலைவர் என்ற முறையில், ஜூலை 27ம் தேதி திங்களன்று தனது இறுதி உரையை ஆற்றிய அரசுத்தலைவர் Aquino அவர்கள், தனது அரசின் சாதனைகளைக் குறிப்பிட்டுப் பெருமிதம் கொண்டார். எனினும், பிலிப்பைன்ஸ் கத்தோலிக்கத் திருஅவையும், பிற சமயத்தவரும் அவரின் அரசைக் குறை கூறியுள்ளனர்.

ஊழல் பிரச்சனை நாட்டின் கலாச்சாரமாகவே மாறியுள்ளது, எனவே வெறும் கொள்கைகளை வகுப்பதைவிட இன்னும் அதிகமாக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என்றுரைத்தார், பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் சாக்ரட்டீஸ் வில்லெகாஸ்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.