2015-08-28 15:51:00

2008ல் காவல்துறை வன்முறைக்குப் பலியானவர்க்கு இழப்பீட்டு நிதி


ஆக.28,2015. இந்தியாவின் மங்களூருவில் ஆலயங்கள் தாக்கப்பட்டதற்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள்மீது காவல்துறை கடுமையாய் நடந்துகொண்டதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவை வரவேற்றுள்ளார் பங்களூரு பேராயர் Bernard Blasius Moras.

2008ம் ஆண்டில் Dakshina கன்னட மாவட்டத்தில் நடந்த போராட்டங்களில் கடுமையாய்க் காயமடைந்த 12 பேருக்கு, தலா 15 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுமாறு, தேசிய மனித உரிமைகள் அவை, கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த உத்தரவு வந்திருக்கின்றது என்று, வத்திக்கான் வானொலியில் கூறிய பேராயர் Moras அவர்கள், தங்களின் வழிபாட்டுத்தலங்கள் அவமானப்படுத்தப்படாமல் பாதுகாப்பது மத நம்பிக்கையாளரின் அடிப்படை உரிமை என்றும் தெரிவித்தார்.

போராட்டங்களை ஒடுக்குவதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கும்போது அது அத்துமீறலாக இருக்கக் கூடாது என்றும் பேராயர் Moras அவர்கள் கூறினார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.