2015-08-28 15:25:00

கடுகு சிறுத்தாலும்.. : உன் இயல்பு எது என புரிந்துகொள்!


புகழ்பெற்ற துறவி ஒருவரிடம் அவருடைய பழைய மாணவர் வந்து, “நான் உங்களிடம் படித்த தியானத்தை முறையாகத்தான் பின்பற்றுகிறேன். அது எனக்கு மிகுந்த மன அமைதியையும் புத்திக் கூர்மையையும் தருகின்றது. ஆனால், நான் தியானத்தில் இல்லாத வேளைகளில் முழுமையான நல்லவனாக இருக்கிறேனா என்ற சந்தேகம் இருக்கிறது. சில நாள்களில் நானும் ஒன்றிரண்டு தவறுகளைச் செய்கிறேன். தியானம் பழகிய ஒருவன் இப்படிச் செய்வது சரிதானா? இதை யோசிக்கும்போது என் உள்ளம் குன்றி, சிறுத்து விடுகிறது!” என்றார். குருநாதர் சிரித்துக்கொண்டே, “ஆக… நீ தியானமும் செய்கிறாய், தவறுகளும் செய்கிறாய், அப்படித்தானே…?   நீ தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், கொஞ்ச நாளில் இதில் ஏதேனும் ஒன்று நின்றுவிடும்!” என்று கூறினார். “அய்யோ.. ஒருவேளை தவறு நிற்பதற்குப் பதில், தியானம் நின்றுவிட்டால்?” எனப் பதறினார் சீடர். “அதுவும் நல்லதுதான். உன்னுடைய இயல்பு எது என்று புரிந்துவிடும், இல்லையா?” என அமைதியாகப் பதிலளித்தார், துறவி. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.