சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

உலகம் \ அறிந்து கொள்வோம்

ஒரே நாளில் முகநூலை பயன்படுத்தியவர்கள் 100 கோடிக்கு மேல்

முகநூலை உருவாக்கிய Mark Zuckerberg - AP

29/08/2015 14:59

ஆக.29,2015. உலகில் தற்போது முதன் முறையாக ஒரே நாளில் நூறு கோடிக்கு மேற்பட்ட மக்கள் முகநூலைப் பயன்படுத்தியுள்ளனர் என்று, முகநூலை உருவாக்கிய Mark Zuckerberg அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்களன்று இந்த 'மைல்கல்' எட்டப்பட்டதாக முகநூலில் எழுதியுள்ள Mark Zuckerberg அவர்கள், இவ்வுலகில் ஏழு பேருக்கு ஒருவர் வீதம் முகநூல் வழியாக, தங்கள் குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் தொடர்பு கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தது மாதம் ஒரு முறையாவது முகநூலைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 150 கோடி. ஆனால் கடந்த திங்களன்று இது, 100 கோடிக்கு அதிகமாகி சாதனை படைத்துள்ளது.

முகநூலை பயன்படுத்துபவர்களின் மொத்த எண்ணிக்கை 2012ம் ஆண்டில் 100 கோடியைத் தொட்டது. 

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி

29/08/2015 14:59