சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

இஸ்ரேல் அரசுத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

இஸ்ரேல் அரசுத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு - EPA

03/09/2015 15:27

இஸ்ரேல் அரசுத் தலைவர், Reuven Rivlin  அவர்கள், இவ்வியாழன் காலை, 10 மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

மத்தியக் கிழக்குப் பகுதியில் நிலவும் மோதல்கள் குறித்தும், அப்பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டதென்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்தது.

இஸ்ரேல், பாலஸ்தீனா நாடுகளுக்கிடையே, நம்பிக்கையை வளர்க்கும் சூழல் உருவாக வேண்டும் என்றும், இருநாட்டு மக்களின் நியாயமான ஏக்கங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் இச்சந்திப்பில் பேசப்பட்டது.

திருத்தந்தையுடன் மேற்கொள்ளப்பட்ட இச்சந்திப்பிற்குப் பின், இஸ்ரேல் அரசுத் தலைவர், Reuven Rivlin அவர்கள், திருப்பீட வெளியுறவுத் துறையின் தலைவர், பேராயர், Paul Gallagher அவர்களையும் சந்தித்து உரையாடினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

03/09/2015 15:27