2015-11-04 16:03:00

திருத்தூதுப் பயணம் கென்யாவை ஒருங்கிணைக்கும் - ஆயர்கள்


நவ.04,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கென்யா நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம் தங்கள் நாட்டை ஒருங்கிணைக்கும் என்ற நம்பிக்கையை, அந்நாட்டு ஆயர் பேரவை, ஓர் அறிக்கையின் வழியே வெளியிட்டுள்ளது.

நவம்பர் 25ம் தேதி முதல், 30ம் தேதி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கென்யா, உகாண்டா, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு ஆகிய மூன்று நாடுகளில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம் குறித்து கென்யா ஆயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக பொருளாதாரத்தில் சிக்கல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்துவரும் கென்யா நாட்டில், ஒற்றுமையைக் குலைக்கும்வண்ணம் தலைவர்கள் ஒருவரை ஒருவரை பழித்துப் பேசுவது, மக்களின் பிரச்சனைகளைக் குறைக்கும் வழி அல்ல என்று ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

திருத்தந்தையின் வருகையும், கடவுளின் ஆசீரும் இருந்தால், நாம் எவ்விதத் துயரத்தையும் மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை நாம் அடுத்தத் தலைமுறையினருக்கு வழங்குவோம் என்று ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.