2015-11-07 15:49:00

ஒரே பாலின தம்பதியர் குழந்தைகளை தத்தெடுக்க ஆயர்கள் எதிர்ப்பு


நவ.07,2015. ஒரே பாலின தம்பதியர் குழந்தைகளைத் தத்தெடுக்கலாம் என்ற கொலம்பிய உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் குறித்து அந்நாட்டு ஆயர்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படும் எதுவும், ஒழுக்க ரீதியாகவும் சரியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை எனக் கூறும் கொலம்பிய ஆயர்கள், பெற்றோரற்ற குழந்தைகளை தத்தெடுக்க குடுமபங்கள் முன்வரவேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.

கொலம்பிய உயர்நீதிமன்ற தீர்மானம் குறித்து தன் கருத்துக்களை வெளியிட்ட அந்நாட்டுப் பேராயர் Luis Augusto Castro Quiroga  அவர்கள், ஒரே பாலின உறவுகளில் ஈர்ப்புடைய மனிதர்களின் மாண்பை மதிக்கும் திருஅவை, அவர்களுக்கு இருக்கும் உரிமைகள் குறித்து எக்கேள்வியையும் எழுப்பவில்லை, மாறாக,  நீதிமன்றத்தின் தீர்மானம், குழந்தைகளைக் காயப்படுத்துகின்றது என்பதையே வலியுறுத்த விரும்புகிறது என்றார்.

ஒரு குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கு உகந்த இடம், ஆணாலும் பெண்ணாலும் உருவாக்கப்பட்ட குடும்பமேயாகும் என்பதையும் வலியுறுத்தினார் பேராயர் Castro Quiroga.

ஆதாரம் : Catholic Culture  / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.