2015-11-07 16:10:00

கனடாவின் 5 பிரச்சனைகள் - புதிய பிரதமருக்கு ஆயர்களின் மடல்


நவ.07,2015. கனடா நாட்டில் அண்மையில் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள Justin Trudeau அவர்களைப் பாராட்டி, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர், ஆயர், Douglas Crosby அவர்கள் அனுப்பியுள்ள மடலில், கனடா நாட்டை தற்போது எதிர்கொள்ளும் 5 பிரச்சனைகளை குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் நலனை முன்னிறுத்தி, புதிய அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் கனடா தலத்திருஅவை தன் செபங்கள் மற்றும் செயல்பாடுகள் வழியே உறுதுணையாக இருக்கும் என்று ஆயர் பேரவையின் சார்பாக, ஆயர் Crosby அவர்கள் கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கனடா நாட்டின் பழங்குடியினருக்கு தேவையான கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வசதிகளை உருவாக்குதல், உலகைப் பாதித்துவரும் புலம் பெயர்ந்தோர் பிரச்சனை, புலம் பெயர்ந்தோர் பிரச்சனையின் முக்கிய காரணமாக விளங்கும் மத்தியக் கிழக்குப் பகுதியின் அமைதியற்ற நிலை, மருத்துவ உதவியுடன் மேற்கொள்ளப்படும் தற்கொலை ஆகிய ஐந்து பிரச்சனைகளை ஆயர் பேரவைத் தலைவர் Crosby அவர்கள் இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.