2015-11-20 16:28:00

அருள்பணியாளர் குறித்த சட்டத்திற்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு


நவ.20,2015. இந்தியாவின் சட்டீஸ்கார் மாநில அரசு அறிவித்துள்ள புதிய விதிமுறையினால், அம்மாநிலத்தில் மிகச் சிறுபான்மையினராக உள்ள கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் தலத்திருஅவை அதிகாரி ஒருவர்.

சட்டீஸ்கார் மாநில அரசின் புதிய கட்டுப்பாடுகள் குறித்துப் பேசிய, Jagdalpur மறைமாவட்ட முதன்மைக் குரு Abraham Kannampala அவர்கள், அரசின் இவ்வறிவிப்பு, அம்மாநிலத்தின் சில கிராமங்களுக்கு கத்தோலிக்க அருள்பணியாளர் செல்வதைத் தடை செய்வதற்கு இந்து தீவிரவாத அமைப்பினருக்கு உதவும் என்று கவலை தெரிவித்தார்.

சட்டீஸ்கார் மாநிலத்தின் தற்போதைய சூழல் கிறிஸ்தவர்களுக்கு எவிவிதத்திலும்  சாதகமாக இல்லை என்றுரைத்த அருள்பணி Kannampala அவர்கள், Baster மாவட்டத்தில் ஏறக்குறைய ஓராண்டளவாக கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன என்றும் கூறினார்.

சில கிராமங்களில் இந்து மதம் அல்லாத பிரச்சாரங்கள், செபங்கள், சொற்பொழிவுகள் ஆகியவை இடம்பெறுவதை உள்ளூர் அரசு நிர்வாகங்கள் தடை செய்துள்ளன. இதனால் அருள்பணியாளர்கள் சில கிராமங்களில் செல்வதைத் இந்துமதக் குழுக்கள் தடை செய்ய முயற்சித்ததையடுத்து, அம்மாநில கிறிஸ்தவ அமைப்பு, உயர்நீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது. உயர்நீதிமன்றம் அரசின் பதிலுக்காக காத்திருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது.     

இந்து மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள சட்டீஸ்கார் மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவே. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.