2015-11-23 15:49:00

மாலி பயங்கரவாத தாக்குதலுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் கண்டனம்


நவ.23,2015. மாலி நாட்டுத் தலைநகர் Bamakoவில் பயணியர் விடுதி ஒன்றில் கடந்த வாரத்தில் இடம்பெற்றுள்ள பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுடன் செபம் நிறைந்த தோழமை உணர்வைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த அறிவற்ற வன்முறைக்கு எதிரான தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதோடு,  இவ்வன்முறை குறித்து தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக, Bamako பேராயர் Jean Zerbo அவர்களுக்கு அனுப்பியுள்ள தந்திச் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இதயங்களின் மனமாற்றத்திற்காகவும், அமைதி எனும் கொடையை மாலி நாடு பெறும்படியாகவும் திருத்தந்தை செபிப்பதாகவும் அச்செய்தி கூறுகின்றது.

இந்த இரங்கல் தந்திச் செய்தியை, திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், Bamako பேராயர் Zerbo அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

Bamakoவில் பயணியர் விடுதியில் இடம்பெற்றுள்ள பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது இருபது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.