2015-12-19 15:10:00

கடுகு சிறுத்தாலும் - இறைவன் மனுக்குலத்தை முத்தமிட்ட விழா


'தவளையும், இளவரசியும்' என்ற பாரம்பரியக் கதை நமக்கு நினைவிருக்கலாம். அக்கதையில், அழகான ஓர் இளவரசி, அழகில்லாத ஒரு தவளையை முத்தமிடுவார். உடனே, அத்தவளையின் சாபம் நீங்க, அது, அழகான ஓர் இளவரசனாக மாறும். சில ஆண்டுகளுக்கு முன், 'Sesame Street' என்ற ஒரு தொலைக்காட்சித் தொடரில், இக்கதை தலைகீழாக மாற்றியமைக்கப்பட்டது. அதாவது, அத்தவளையை இளவரசி முத்தமிட்டதும், அவர் தவளையாக மாறிவிடுவார். இறைவன், மனிதரில் ஒருவரானதை இக்கண்ணோட்டத்தில் நாம் சிந்திக்கலாம். புனித பவுல் அடியார் கூறிய வார்த்தைகள் நினைவில் அலைமோதுகின்றன:

கடவுள் வடிவில் விளங்கிய அவர்,... தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்... (பிலிப்பியர் 2: 6-7)

இறைவன் மனுக்குலத்தை முத்தமிட்டதால், அவரே நம்மில் ஒருவராக மாறியதைக் கொண்டாடும் விழாதான், கிறிஸ்மஸ் பெருவிழா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.