2016-01-19 15:44:00

51வது உலக திருநற்கருணை மாநாடு குறித்து கர்தினால் போ


சன.19,2016. மதங்கள், கலாச்சாரங்கள் மற்றும் ஏழைகளுடன் உரையாடல் நடத்துவதன் வழியாக நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்று கூறினார் மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ.

பிலிப்பீன்ஸ் நாட்டின் செபுவில் இம்மாதம் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறவிருக்கும் 51வது அனைத்துலக திருநற்கருணை மாநாட்டில், திருத்தந்தையின் பிரதிநிதியாக கலந்துகொள்ளவிருக்கும் கர்தினால் போ அவர்கள், அம்மாநாடு குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

பெரிய மதங்களின் குவிமையாமாக விளங்கும் ஆசியா, மேற்குலகம் ஏற்றுள்ளதுபோல, இன்னும் சமயச்சார்பற்றதன்மையை தழுவவில்லை என்றும், ஒவ்வொரு சமூகத்திலும் காணப்படும் ஆன்மீக வாழ்வு, மற்றவருக்கு நற்செய்தி அறிவிக்க உதவும் என்றும் கூறினார் கர்தினால் போ. எதார்த்தங்களின் வழியாக கடவுள் என்ன சொல்கிறார் என்பதை நோக்கும் சவாலை ஆசியத் திருஅவை கொண்டுள்ளது என்றும் கூறினார் கர்தினால் போ.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.