2016-01-19 15:51:00

சிரியா மக்களுக்கு உணவளிக்க மறுக்கின்றனர் தீவிரவாதிகள்


சன.19,2016. சிரியாவின் அப்பாவி மக்களை பசியால் துன்புறவிடுவதை ஓர் ஆயுதமாக தீவிரவாதக் குழுக்கள் பயன்படுத்தி வருவதாக கவலையை வெளியிட்டார் அந்நாட்டிற்கான திருப்பீடத் தூதுவர் பேராயர் Mario Zenari.

சிரியா உள்நாட்டுப் போரில் பசியையும் தாகத்தையும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி மக்களைக் கொடுமைப்படுத்தும் நிலைகள் என்பது, குற்றச்செயல் மற்றும் அவமானத்துக்குரிய செயல் என்று கண்டனத்தை வெளியிட்டார் பேராயர் Zenari.

தீவிரவாதிகளின் காட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நகர்களுக்கு வெளியே வாகனங்களில் பெருமளவான உணவும் மருந்துகளும் அனுமதி வேண்டி காத்திருக்கும் வேளையில், நகர்களுக்குள்ளே பெருமெண்ணிக்கையில் மக்கள் கடந்த ஓராண்டாக பசியால் இறந்து வருவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல் என்றார் திருப்பீட அதிகாரி பேராயர் Zenari. 

ஆதாரம் : Catholic Culture/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.