2016-01-25 16:15:00

அறநெறி, அகவாழ்வைப் புதுப்பிப்பதற்கு நற்செய்தியின் அழைப்பு


சன.25,2016. பிலிப்பீன்ஸ் நாட்டின் செபு நகரில் தொடங்கியுள்ள 51வது அனைத்துலக திருநற்கருணை மாநாட்டில், மறைக்கல்வி வகுப்புகளை ஆரம்பித்து வைத்த, பெரு நாட்டுப் பேராயர் Miguel Cabrejos Vidarte அவர்கள், ஒரு மனிதரின் அறநெறி மற்றும் அகவாழ்வைப் புதுப்பிப்பதற்கு நற்செய்தி அழைப்பு விடுக்கின்றது என்று கூறினார்.

கிறிஸ்து உங்களில் இருக்கிறார், அவர், நம் மகிமையின் நம்பிக்கை என்ற தலைப்பில் நடைபெற்றுவரும் இம்மாநாட்டின் மையப் பொருளை வைத்துப் பேசிய, பெரு நாட்டின் Trujillo பேராயர் Cabrejos Vidarte அவர்கள் இவ்வாறு கூறினார்.

கிறிஸ்தவ வாழ்வு நற்செய்தி வலியுறுத்தும் அறநெறிக் கூறுகளை வாழ்வதில் அடங்கியுள்ளது என்றும், நற்செய்தி அறிவிப்பதன் நோக்கம் கிறிஸ்துவில் ஒவ்வொருவரையும் நிறைவுள்ளவராக்குவது என்றும் கூறினார் பேராயர் Cabrejos Vidarte.

நிறைவான வாழ்வு என்பது, ஒரு சிலருக்காக மட்டும் உள்ள கற்பனை உலகம் அல்ல என்றும், ஒவ்வொரு விசுவாசியும் தனது அகவாழ்வைப் புதுப்பிப்பதால் நிறைவாழ்வை அடைய முடியும் என்றும் கூறினார் பேராயர் Cabrejos Vidarte.

ஆதாரம் : CBCP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.