2016-02-12 16:48:00

சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுமாறு காலிமன்ட்டன் ஆயர்கள்


பிப்.12,2016. இந்தோனேசியாவின் பொர்னேயோ தீவில், சுரங்க மற்றும் palm oil என்ற எண்ணெய் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் அழிவு குறித்து மிகவும் கவலை தெரிவித்துள்ளனர் அத்தீவின் காலிமன்ட்டன் மாநில(Kalimantan) ஆயர்கள்.

சட்ட முறைப்படியும், சட்டத்திற்குப் புறம்பாகவும் காலிமன்ட்டனில் இடம்பெறும் சுரங்கத் தொழில்களால் அப்பகுதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று,  Banjarmasin ஆயர் Petrus Boddeng Timang அவர்கள் கூறினார்.

சுரங்க மற்றும் palm எண்ணெய் தொழிற்சாலைகளால் காடுகள் அழிக்கப்பட்டு வருவதால், அப்பகுதியின் இயற்கை வளங்கள் சேதமடைந்து வருகின்றன என்றும் கூறியுள்ள ஆயர் Timang அவர்கள், உள்ளூர் கத்தோலிக்கர் சுற்றுச்சூழலைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

1980களில் காடுகளை அழித்து இரப்பர் மரங்களைப் பயிரிடத் தொடங்கினர், அந்நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறாமல், palm மரங்களைப் பயிரிடத் தொடங்கினர், இவ்வாறு செய்பவர்கள், உள்ளூர் மக்களின் பொதுவான நில உரிமையைப் புறக்கணிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார் ஆயர் Timang.

ஆயர் Timang அவர்கள் உட்பட அப்பகுதியின் எட்டு ஆயர்கள் இணைந்து வெளியிட்ட மேய்ப்புப்பணி அறிக்கை திருநீற்றுப் புதனன்று ஆலயங்களில் வாசிக்கப்பட்டது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.