2016-02-13 15:42:00

சிறைக் கைதிகள் மீது திருத்தந்தை அக்கறை


பிப்.13,2016. மெக்சிகோ நாட்டின் Monterreyவிலுள்ள Topo Chico சிறையில் ஏற்பட்ட வன்முறையில் இறந்தவர்களுக்குத் தனது அனுதாபத்தைத் தெரிவிக்கும் தந்திச் செய்தியையும் அனுப்பினார் திருத்தந்தை. அச்சிறையில் போதைப்பொருள் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதல்களில் 49 பேர் இறந்துள்ளனர். திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரில், பேராயர் காப்ரேரா லொப்பெஸ் அவர்களுக்கு இச்செய்தியை அனுப்பியுள்ளார். இந்த மெக்சிகோ நாட்டுத் திருப்பயணத்தில், அந்நாட்டின் எல்லையிலுள்ள ஹூவாரெஸ் நகரிலுள்ள சிறைக்குச் சென்று கைதிகளைச் சந்திப்பார் திருத்தந்தை. பன்னாட்டு சிறைத் தரத்தைக் கொண்டுள்ள இங்கு மூவாயிரம் கைதிகள் உள்ளனர். இவர்களில் 700 பேரைச் சந்தித்து உரையாற்றும் திருத்தந்தை, ஐம்பது பேரைத் தனியே கைகுலுக்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அர்ஜென்டீனா நாட்டின் புவனெஸ் ஐரெஸ் நகரிலுள்ள இளம் கைதிகளுடன் 15 நாள்களுக்கு ஒரு முறை தொலைபேசியில் திருத்தந்தை உரையாடி வருவதை இச்சனிக்கிழமையன்று அறிவித்தார் அருள்பணி லொம்பார்தி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.