2016-02-17 14:53:00

இது இரக்கத்தின் காலம் : வன்முறைக்கு வெற்றியே கிடையாது


ஒருமுறை, சூரியனுக்கும் காற்றுக்கும் கடும் போட்டி ஏற்பட்டது. என்னுடைய பலத்தால் பெரிய மரங்களைச் சாய்ப்பேன், பாறைகளைப் புரட்டிப் போடுவேன், கடலைப் பொங்கச் செய்வேன், கப்பல்களைக் கவிழ்ப்பேன் என்றது காற்று. உடனே சூரியன், நான் இருந்தால்தான் இந்த உலகமே இருக்கும், மாலையில் நான் மறைந்ததும் மக்கள் தடுமாறுவதைப் பார்த்தாயா, தாவரங்கள் என்னைக் கொண்டே சாப்பிடுகின்றன, அந்தத் தாவரங்களையே உலகிலுள்ள உயிர்கள் சாப்பிடுகின்றன, எனவே நான் இல்லாவிட்டால் இந்த அகிலமே இல்லை என்று பெருமை பேசியது. இவர்களின் சண்டையைக் கேட்ட மறுஉலக மனிதர் ஒருவர், சூரியனே, காற்றே, உங்களில் யார் பெரியவர் என்பதற்கு நான் ஒரு போட்டி வைக்கிறேன், அதில் வெல்பவரே பெரியவர் என்றார். இரண்டும் போட்டிக்கு ஒத்துக்கொண்டன. அதோ போகிறாரே மனிதர், அவரிடம், உங்கள் வல்லமையைக் காட்டி, அவரின் சட்டையை அவிழுங்கள், பார்க்கலாம் என்றார் மறுஉலக மனிதர். காற்று கடும் சூறாவளியாக வேகமாக வீசியது. அந்த மனிதர் கூனிக்குறுகி, ஓரிடத்தில் மறைவாக அமர்ந்து தனது சட்டையைக் காத்துக் கொண்டார். அடுத்து சூரியன் தன் கடும் வெப்பத்தைக் காட்டியது. அந்த மனிதரால் வெப்பம் தாங்க முடியவில்லை. வியர்த்துக்கொட்டியது. ஆனாலும், விசிறியால் தன்னைக் காத்துக்கொண்டார். அப்போது மறுஉலக மனிதர், சூரியனிடமும், காற்றிடமும், வன்முறை தோற்றுப்போகும் என்பதைப் புரிந்துகொண்டீர்களா என்று கூறினார்.

இது இரக்கத்தின் காலம். சொல்லிலும், செயலிலும், எண்ணத்திலும், மனதிலும்  வன்முறையே கூடாது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.