2016-02-24 16:02:00

சிரியாவின் புலம்பெயர்ந்தோருக்கு கனடா தலத்திருஅவை நிதி உதவி


பிப்.24,2016. சிரியாவின் புலம்பெயர்ந்தோருக்கு உதவி செய்யும் வகையில், கனடா நாட்டு தலத்திருஅவை, 35 இலட்சம் டாலர்கள் நிதியைத் திரட்டியுள்ளதாக Zenit கத்தோலிக்கச் செய்தி அறிவித்துள்ளது.

இவ்வாண்டு சனவரியிலிருந்து துவக்கப்பட்ட நிதித் திரட்டும் முயற்சியில், கனடா நாட்டு ஆயர் பேரவை, கனடா காரித்தாஸ் அமைப்பு, Aid to the Church in Need ஆகியவை இணைந்துள்ளன.

இந்த முயற்சியில் திரட்டப்படும் தொகைக்கு சமமான ஒரு தொகையை கனடா அரசு வழங்கும் என்று, கனடாவின் பன்னாட்டு முன்னேற்றத் துறையின் அமைச்சர், மாண்புமிகு Marie-Claude Bibeau அவர்கள் கூறியுள்ளார்.

சிரியா, ஜோர்டன், லெபனான், துருக்கி ஆகிய நாடுகளில் வாழும் 6,00,000த்திற்கும் அதிகமான புலம் பெயர்ந்தோரின் தேவைகளை நிறைவேற்ற இத்தொகை பயன்படுத்தப்படும் என்று, இக்கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.