2016-03-19 16:22:00

அண்மைக் காலத்தில் கிறிஸ்தவ சபைகள் அதிகம் நெருங்கி வந்துள்ளன‌


மார்ச்,19,2016. அண்மைக் காலங்களில் கிறிஸ்தவ சபைகளிடையே ஏற்பட்டுள்ள நேரடி சந்திப்புகளும், இதயங்களிடையே உருவாகியுள்ள ஒப்புரவும், அவற்றை மிக நெருக்கமாகக் கொண்டுவர உதவியுள்ளன என்றார், திருப்பீட அதிகாரிகளுக்கு தவக்கால சிந்தனைகளை வழங்கிவரும் அருள்பணி Raniero Cantalamessa.

ஒவ்வொரு கிறிஸ்தவ சபையும் தனக்கென வகுத்துள்ள கிறிஸ்தவக் கோட்பாடுகளுக்கு அதி முக்கியத்துவம் கொடுப்பதை விட, தங்களுக்குள் பகிர்ந்துவரும் கிறிஸ்தவ விசுவாசத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார், கப்புச்சின் துறவுசபை அருள்பணியாளர் Cantalamessa.

கிறிஸ்தவ சபைகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதைவிட, இணைந்து ஆற்றவேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன என்ற திருப்பீட அதிகாரப்பூர்வ தியானப் போதகர், நம் நம்பிக்கைகளால் அல்ல, மாறாக, கிறிஸ்துவின் மீது நாம் கொள்ளும் நம்பிக்கைகளாலேயே நாம் ஏற்புடையவராகிறோம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம்: Catholic Culture/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.