2016-04-01 16:24:00

ஜெர்மன் தலைவரின் சீனப் பயணம் திருஅவைக்கு உதவும்


ஏப்.01,2016. ஜெர்மன் அரசுத்தலைவர் Joachim Gauck அவர்கள், புனித வியாழனன்று சீனாவின் பேராலயம் ஒன்றிற்குச் சென்றிருப்பது, தலத்திருஅவையின் பிறரன்புப் பணிகளின் வளர்ச்சிக்கு உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார் சீன ஆயர் ஒருவர்.

ஜெர்மன் அரசுத்தலைவர் Gauck அவர்கள், சீனாவுக்கு மேற்கொண்ட ஐந்து நாள் சுற்றுப்பயணத்தில், Shaanxi மாநிலத்தைப் பார்வையிட்டபோது, Xi மறைமாவட்டத்தின் பிறரன்புப் பணிகள் குறித்து தான் விளக்கியதாகத் தெரிவித்தார் ஆயர் Anthony Dang Mingyan.

ஜெர்மன் ஆயர் பேரவையின் வளர்ச்சி ஆணைக்குழுவோடு உறுதியான உறவை ஏற்படுத்துவதற்கு Xi மறைமாவட்டம் முயற்சி எடுப்பதாகவும், ஜெர்மன் அரசுத்தலைவரின் சீனப் பயணம் இதற்கு உதவும் என்றும் தனது நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் ஆயர் Anthony Mingyan.

புனித வியாழனன்று, Xi பேராலயத்திற்கு ஜெர்மன் அரசுத்தலைவர் சென்றபோது, அங்கு ஏறக்குறைய நாற்பதாயிரம் கத்தோலிக்கர் கூடியிருந்தனர் என்றும் கூறினார் ஆயர் Anthony Mingyan.

இந்த மார்ச் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஜெர்மன் அரசுத்தலைவர் Gauck அவர்கள், சீனாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.