2016-04-13 15:07:00

தானியங்கும் உயிர்க்கொல்லி ஆயுதங்களுக்குத் தடை விதிக்க..


ஏப்.13,2016. மனிதரின்றி, தானியங்கும் உயிர்க்கொல்லி ஆயுதங்கள், அனைத்து விதமான பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் பிற தாக்குதல்களுக்கு எதிராக, அப்பாவி மக்களைப் பாதுகாப்பதில்லை என்று, திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்கள் மற்றும் பிற பன்னாட்டு நிறுவனங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Ivan Jurkovič அவர்கள், தானியங்கும் உயிர்க்கொல்லி ஆயுத அமைப்புகள் குறித்த வல்லுனர்கள் கூட்டத்தில் இத்திங்களன்று ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார்.

மனிதரின்றி, தானியங்கும் உயிர்க்கொல்லி ஆயுதங்களைப் பயன்படுத்துபவர்கள், தங்கள் உயிரையும் தியாகம் பண்ணுவதற்குத் தயாராக உள்ளார்கள் என்றும், இவர்கள் பயனற்ற முறைகளைக் கையாள்கின்றனர் என்றும் கூறினார் பேராயர் Jurkovič.

நீதி நிலைநாட்டப்படவும், மனித உரிமைகள் மதிக்கப்படவும், சிறுபான்மையினர் மதிக்கப்படவும், ஒருங்கிணைந்த வளர்ச்சி ஊக்குவிக்கப்படவும், அரசியல் ஈடுபாட்டிற்குமென இடம்பெறும் சண்டையே, உண்மையான போர் எனவும் கூறினார் பேராயர் Jurkovič.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.