2016-04-27 16:00:00

அருளாளர், இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வு ஏற்பு


ஏப்.27,2016. இத்தாலிய மறைமாவட்ட அருள்பணியாளர் அருளாளர் அல்போன்சோ மரிய ஃபூஸ்கோ (Alfonso Maria Fusco) அவர்கள் உட்பட, புனிதர் பட்டம் மற்றும் முத்திப்பேறு பட்டம் வழங்குவதற்கென பலரின் வீரத்துவ புண்ணிய வாழ்வு பற்றிய விபரங்களையும், அவர்களின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகளையும் ஏற்றுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

தூய திருமுழுக்கு யோவான் சகோதரிகள் சபையை நிறுவிய அருளாளர் அல்போன்சோ மரிய ஃபூஸ்கோ (1839-1910); இன்னும், அயர்லாந்து நாட்டின் இயேசு சபை அருள்பணியாளர் இறையடியார் ஜான் சுலைவான்(1861-1933) ஆகிய இருவரின் பரிந்துரைகளால் புதுமைகள் நடந்துள்ளன.

இறையடியார் அருள்பணியாளர் José Antón Gómez, OSB, அவரோடு சேர்ந்த மூன்று பெனடிக்ட் சபை அருள்பணியாளர்கள், 1936ம் ஆண்டில் இஸ்பானிய உள்நாட்டுச் சண்டையில் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர். 

மேலும், பிரான்சிஸ்கன் சபையின் Durazzo பேராயர் Nikollë Vinçenc Prennushi அவர்களும், அவரோடு சேர்ந்து 37 பேரும், 1945ம் ஆண்டுக்கும் 1974ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், அல்பேனியாவில், கம்யூனிச அதிகாரிகளால், மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர். 2014ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அல்பேனியா சென்றபோது, இம்மறைசாட்சிகளிடம் செபித்தார்.

தென் கொரிய மறைமாவட்ட அருள்பணியாளர் Thomas Choe Yang-Eop(1821-1861) அவர்களின் வீரத்துவமான பண்புகளையும், திருத்தந்தை அங்கீகரித்துள்ளார். இந்நாட்டிற்கும் திருத்தந்தை திருத்தூதுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

மேலும், 1941ம் ஆண்டில் பிறந்து, 1959ம் ஆண்டில் இறந்த பொதுநிலை விசுவாசி இறையடியார் Maria Montserrat Grases García, பிரான்சிஸ்கன் சபை இறையடியார் Venanzio Katarzyniec மற்றும் பல்வேறு துறவு சபைகளைத் தொடங்கிய இறையடியார்கள் Sosio Del Prete, Maria Consiglio dello Spirito Santo, Maria dell’Incarnazione, Maria Laura Baraggia, Ilia Corsaro ஆகியோரின் வீரத்துவ புண்ணிய வாழ்வுமுறைகளையும் ஏற்றுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.