2016-05-12 15:36:00

வறுமையைத் தீர்க்கும் புதுவகை தொழிற் முயற்சிகள் - கருத்தரங்கு


மே,12,2016. புதுவகை தொழிற் முயற்சிகள் வழியே வறுமையையும், புலம் பெயர்ந்தோர் பிரச்சனைகளையும் எவ்விதம் தீர்ப்பது என்ற மையக் கருத்தில், மே 12, இவ்வியாழன் முதல் 14, இச்சனிக்கிழமை முடிய, வத்திக்கானில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு நடைபெறுகின்றது.

Centesimus Annus - Pro Pontifice என்ற அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள இந்த கருத்தரங்கில் கலந்துகொள்வோரை, மே 13, இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திக்கிறார்.

வர்த்தகம், தொழில் ஆகியத் துறைகளில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகள், வறுமையைப் போக்கவும், புலம்பெயரும் கட்டாயத்தை நீக்கவும் உதவிகள் செய்ய முடியும் என்பதை கருத்தரங்கில் கலந்துகொள்வோர் விவாதிக்க உள்ளனர்.

அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் பங்கேற்கும் இக்கருத்தரங்கில், காரித்தாஸ் உறுப்பினர்கள், மற்றும் செஞ்சிலுவை அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர் என்று, Centesimus Annus - Pro Pontifice அறக்கட்டளையின் தலைவர், Domingo Sugranyes Bickel அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.