சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

இயேசு அனைவரையும் அழைக்கிறார் - திருத்தந்தையின் டுவிட்டர்

திருத்தந்தையின் டுவிட்டர் பக்கம் - ANSA

18/05/2016 14:51

மே,18,2016. "இந்த யூபிலி ஆண்டு கொண்டாட்டங்களுக்கு, ஒருவரையும் ஒதுக்கி வைக்காமல், இயேசு நம் அனைவரையும் அழைக்கிறார்" என்ற வரவேற்பு வரிகள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, இப்புதனன்று வெளியானது.

மேலும், மே மாதம் 21ம் தேதி முதல், 28ம் தேதி முடிய திருப்பீட உயர் அதிகாரிகளில் ஒருவரான, கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள், கொலம்பியா நாட்டில் மேய்ப்புப்பணி பயணம் ஒன்றை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொலம்பியா நாட்டின் Bucaramanga என்ற நகரில், மே 26 முதல் 28 முடிய நடைபெறவிருக்கும் மறைபரப்புப்பணி தேசிய மாநாட்டில் கலந்துகொள்ள, நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட பேராயத்தின் தலைவர், கர்தினால் பிலோனி அவர்கள் அந்நாட்டிற்குச் செல்கிறார்.

இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் பேரவையைச் சந்திப்பது, கொலம்பியா நாட்டிற்கென அண்மையில் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள இரு ஆயர்களுக்கு அருள்பொழிவு செய்வது ஆகியவை, கர்தினால் பிலோனி அவர்களின் பயணத் திட்டத்தில் இடம்பெறும் சில முக்கிய நிகழ்ச்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

18/05/2016 14:51