2016-05-20 15:44:00

இது இரக்கத்தின்காலம்: இயல்பு நிலை ஏற்பே, ஞானத்தின் அடையாளம்


ஜென் குரு ரின்சாய் மாணவராக இருந்தபோது, அவரது குருவுடன் சுமார் 20 ஆண்டுகள் தங்கியிருந்தார். ஒரு நாள் ரின்சாய் தனது குருவின் இருக்கையில் அமர்ந்தார். அப்போது அறைக்குள் வந்த குரு, ரின்சாய் தனது இருக்கையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். உடனே அமைதியாகச் சென்று ரின்சாயின் இருக்கையில் அமர்ந்துகொண்டார். அவர்கள் இருவரும் எதுவும் பேசவில்லையென்றாலும், எண்ணங்கள் பேசிக்கொண்டன. ரின்சாய், குருவைப் பார்த்து, ‘நான் உங்கள் இருக்கையில் அமர்ந்துள்ளேனே, உங்களை நான் அமதிக்கவில்லையா, நான் நன்றி மறந்துவிட்டேனா’ என்று கேட்டார். அதற்கு குரு புன்னகை புரிந்துவிட்டு, ‘நீ மாணவனாக இருந்து சீடன் ஆனாய், தற்போது குருவாகிவிட்டாய். இனி நீ என் வேலைகளை பகிர்ந்து கொள்வாய் அல்லவா! அதனால் எனக்கு சந்தோஷம்தான். நான் தினமும் இங்கு வரத் தேவையில்லை. வேலையைச் செய்ய ஒருவர் உள்ளார் என்று எனக்குத் தெரியும்’ என்றார்.

நடப்பவை அனைத்தையும், நேர்மறை எண்ணத்துடன், சாதகமாக நோக்குவதே, ஞானம் பெற்றவர்களுக்கான அடையாளம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.