2016-06-02 16:12:00

கானடாவின் கருணைக்கொலை அனுமதிக்கு திரு அவை எதிர்ப்பு


ஜூன்,02,2016. கானடாவில் கருணைக் கொலையை அனுமதிக்கும் புதிய சட்ட திருத்தம், மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, செனட் அவையின் இறுதி அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது குறித்து தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

தாங்க முடியாத, அல்லது, தீராத நோயினால் துன்பங்களை அனுபவித்துவரும் நோயாளிகளுக்கு கருணைக் கொலையை அனுமதிக்கும் புதிய சட்ட பரிந்துரை குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது கானடா ஆயர் பேரவை.

தங்கள் மனச்சான்றிற்கு இயைந்த வகையில் கருணைக் கொலையை நிறைவேற்ற மறுக்கும் கத்தோலிக்க மருத்துவர்களும், தாதியர்களும், இப்புதிய சட்ட திருத்தத்தால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறும், கானடா ஆயர் பேரவைத்தலைவர், ஹெமில்டன் ஆயர் Douglas Crosby, மருத்துவப் பணியாளர்களின் மனச்சன்று நடவடிக்கைகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லையெனில், கத்தோலிக்க மருத்துவ மனைகள் மூடப்படும் அபாயம் உருவாகும் என்றார்.

கானடா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, தற்போது செனட் அவைக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த கருணைக்கொலை அனுமதிப்பு சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க  செனட் அவைக்கு, இம்மாதம் 6ம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : Catholic Universe  /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.