2016-06-02 16:17:00

பழங்குடியினரிடையே மதுப்பழக்கத்தை ஒழிக்க திருஅவை முயற்சி


ஜூன்,02,2016. இந்தியாவின் பழங்குடி இனத்தவர்கள், தங்கள் திருவிழாக் காலங்களில் மது அருந்துவது தவறில்லை, ஆனால், மதுவுக்கு அடிமையாவதே எதிர்க்கப்படுகிறது என இந்திய தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடி இனத்தவருள் 60 விழுக்காட்டினர், மதுவுக்கு அடிமையாக உள்ள நிலையில், இது குறித்து கவலையை வெளியிட்ட கும்லா ஆயர் Paul Alois Lakra, பழங்குடி இன கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக, திருவிழாக் காலங்களில் மது அருந்துவது தவறல்ல, ஆனால் குடும்பங்கள் பாதிக்கப்படும் வகையில் மதுப் பழக்கத்திற்கு அடிமையாவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஆயர் Lakra மேலும் கூறுகையில், பழங்குடி இன மதங்களின் தலைவர்களும் தற்போது, இந்த மதுப் பழக்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய முன்வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது என்றார். 

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.