2016-06-04 17:37:00

கத்தோலிக்கர், நேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்க்கு வீடுகள்


ஜூன்,04,2016. நேபாளத்தில், ஓராண்டுக்கு முன்னர் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால், போதுமான குடியிருப்புக்கள் இன்றி இன்னும் மக்கள் துன்புறும்வேளை, பெங்களூருவைச் சேர்ந்த கத்தோலிக்கர் 450 தற்காலிகக் குடியிருப்புக்களை அமைத்துக் கொடுத்துள்ளனர்.

கிளேரிசியன், நார்பெர்ட்டைன் சபைகளின் அருள்பணியாளர்கள் மற்றும் பல்வேறு பொதுநிலை கத்தோலிக்கக் கழகங்கள் இணைந்து, நேபாள பெங்களூரு பராமரிப்பு நிதி என்ற ஓர் அமைப்பை உருவாக்கி, தேவையில் இருப்பவர்க்கு வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கு நிதி சேகரித்தனர். இந்நிதி அமைப்புக்கு, பல்வேறு துறவு சபைகளும், தன்னார்வ நிறுவனங்களும் நிதியுதவி செய்தன.

நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அருள்பணியாளர்களும், தன்னார்வலர்களும் கட்டுமானப் பணிகளில் உதவி வருகின்றனர்.

காத்மண்டு புறநகர்ப் பகுதியிலுள்ள Budaneelkantaவில், தொழுநோயாளர்க்கு ஐம்பது தற்காலிகக் குடியிருப்புக்களை அமைத்துக் கொடுத்துள்ளனர். அடுத்த கட்டமாக, அவர்களுக்கு நிரந்தரமான வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் உள்ளனர்.

நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளில், கடந்த ஓராண்டில் 450 தற்காலிகக் குடியிருப்புக்களை இவர்கள் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.