2016-06-06 16:21:00

திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை


ஜூன்,06,2016. உலகில், நீதி மற்றும் அமைதியைக் கட்டியெழுப்புவதில் ஒவ்வொரு நாளும் நமக்கு ஆதரவாக இருக்கவும், நாம் தூய்மையில் வளரவும் நம்மை வழிநடத்துமாறு, அன்னை மரியிடம் செபிப்போம் என்று, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு புனிதர் பட்டமளிப்புத் திருப்பலியை நிறைவேற்றிய பின்னர் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இத்திருப்பலியில் கலந்துகொண்ட எல்லாருக்கும், குறிப்பாக, போலந்து அரசுத்தலைவர் தலைமையில் இதில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் மற்றும் சுவீடன் நாட்டுப் பிரதிநிதிகள் குழுவுக்கு நன்றி தெரிவித்தார்.

இப்புதிய புனிதர்கள் தங்களின் பரிந்துரைகளால் இவ்விரு நாடுகளையும் காப்பார்களாக என்றும் கூறினார் திருத்தந்தை.

போலந்து அரசுத்தலைவர் Andrzej Duda அவர்கள், தனது மனைவி Agata Kornhauser-Duda மற்றும் அரசுப் பிரதிநிதிகள் குழுவுடனும், சுவீடன் கலாச்சார அமைச்சர் Alice Bah Kuhnke அவர்கள், அரசுப் பிரதிநிதிகள் குழுவுடனும் இதில் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.