சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

உலகம் \ அறிந்து கொள்வோம்

சிறிய ஆயுத வர்த்தகம் பன்னாட்டு அளவில் அதிகரிப்பு, ஐ.நா.

கைப்பற்றப்பட்ட சிறிய ஆயுதங்கள் - AFP

07/06/2016 16:21

ஜூன்,07,2016. ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து நாடுகள், சிறிய ஆயுதங்களை, அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகள் என, ஐ.நா. ஆதரவுடன் நடத்தப்பட்ட புதிய ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

“சிறிய ஆயுதங்கள் வர்த்தகம் : பரிமாற்றம் மற்றும் ஒளிவுமறைவற்றதன்மை” என்ற தலைப்பில், நியுயார்க், ஐ.நா. தலைமையகத்தில் இத்திங்களன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ஐ.நா.வின் உறுப்பு நாடுகள், உலக ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தை முழுமையாய் அமல்படுத்துவது இன்றியமையாதது என்று கூறப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டில், பன்னாட்டு அளவில், 580 கோடி டாலர் பெறுமான சிறிய ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன, இது, 2012ம் ஆண்டைவிட 17 விழுக்காடு அதிகம் என்றுரைக்கும் இவ்வறிக்கை, 2013ம் ஆண்டில், அமெரிக்க ஐக்கிய நாடு 240 கோடி டாலருக்கு அதிகமான மதிப்புடைய சிறிய ஆயுதங்களை இறக்குமதி செய்தது, இது, 2001ம் ஆண்டைவிட மிக அதிகம் என்றும் கூறுகிறது.

2013ம் ஆண்டில், சிறிய ஆயுதங்களைப் புதிதாக இறக்குமதி செய்த நாடுகளில்    நார்வே, சவுதி அரேபியா, அரபு ஐக்கிய குடியரசு ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன என்றும், மத்திய கிழக்கு நாடுகளுடனான இந்த வர்த்தகம், குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

07/06/2016 16:21