2016-06-11 16:54:00

ஜோர்டனில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அமைப்பு கண்டுபிடிப்பு


ஜூன்,11,2016. ஜோர்டனின் பெட்ரா (Petra) பகுதியில் உள்ள தொல்லியல் இடிபாடுகளில் புதையுண்டு இருந்த, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த பிரம்மாண்ட கட்டட அமைப்பு ஒன்றை, தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் புதையுண்டுள்ள 184 அடி நீளம், 161 அடி அகலம் கொண்ட அந்தக் கட்டட அமைப்பை வெளிப்படுத்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன.

அந்தக் கட்டடம், 2150க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

ஒரு நினைவுச் சின்ன வடிவிலான படிகளால் சென்றடையப்படும் இந்தக் கட்டட அமைப்பு, இன்னொரு மேடை போன்ற பகுதியை இணைத்திருப்பதாகத் தோன்றுகிறது.

இந்த அமைப்பு, கிரேக்க மற்றும் பாரசீக நாடுகளோடு பெட்ரா வர்த்தகம் மேற்கொண்டு வளம் கொழித்த நேரத்தில், பாரம்பரிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றும் மேடையாகப் பயன்பட்டதாக நம்பப்படுகிறது. 

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.