2016-06-13 16:50:00

மாற்றுத்திறனாளிகளுக்குக் கண்களை மூடுவது வேதனையளிக்கிறது


ஜூன்,13,2016. நோயாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மகிழ்வாக இருக்க முடியாது எனவே அவர்கள், சமூகத்தின் பார்வையிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்ற மனநிலை அதிகரித்து வருவதற்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டின் ஒரு நிகழ்வாக, வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் யூபிலி விழாத் திருப்பலியை இஞ்ஞாயிறு காலையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நிறைவேற்றிய திருத்தந்தை, உண்மையில், நம் அன்புகூரும் திறமையைப் பொருத்தே, உண்மையான மகிழ்வை எட்ட முடியும் என்று மறையுரையில் கூறினார்.

ஒருவரின் உடலைப் பராமரிப்பது ஒரு பெரிய தொழிலாக மாறிவரும் இக்காலத்தில், உடலில் முழுமை பெறாமல் இருக்கும் எதுவும், மறைத்து வைக்கப்பட வேண்டும், ஏனென்றால், இது, செல்வாக்குப்பெற்ற சிலரின் மகிழ்வுக்கும் அமைதிக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும், ஆதிக்கத்தின் எடுத்துக்காட்டுக்கு ஆபத்தாக உள்ளது என்றும் நோக்கப்படுவதாகத் தெரிவித்தார் திருத்தந்தை.

மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் பார்வையிலிருந்து மறைத்து வைக்கப்படக் கூடாது, இவர்கள் அன்புகூரப்பட வேண்டும் என்று மறையுரையாற்றிய திருத்தந்தை, இவர்களில் வாழ்வின் உண்மையான பொருளைப் புரிந்துகொள்ளத் தவறுபவர்கள், துன்பங்களையும் குறைகளையும் ஏற்கத் தவறுகின்றவர்கள் என்றும் கூறினார்.

ஒருவரின் நெருக்கடி நிறைந்த சூழலில், இவர்கள் ஏற்கமுடியாதப் பொருளாதாரச் சுமை என்றும் கூறப்பட்டு, கூடியவிரைவில் இவர்களை ஒழித்து விடுவது நல்லது என்றுகூட சில நோயாளர்களில் சொல்லப்படுகின்றது என்றுரைத்த திருத்தந்தை, சமூகத்தால் ஒதுக்கப்பட்ட நோயாளர், பெண்கள் மற்றும் பலவீனர்களை இயேசு அதிகம் அன்புகூர்ந்தார் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.