2016-06-16 16:53:00

மாற்றுத்திறன் பற்றிய வத்திக்கான் கருத்தரங்கு


ஜூன்,16,2016. “வாழ்வின் மோசமான சூழ்நிலையிலும், கடவுள் நமக்காகக் காத்திருக்கிறார், நம்மை அரவணைக்க விரும்புகிறார் மற்றும் நம்மை எதிர்பார்த்திருக்கிறார்” என்பது, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, இவ்வியாழனன்று வெளியாயின.

மேலும், அனைத்து மக்களின், குறிப்பாக, மாற்றுத்திறன்களோடு வாழும் மக்களின் கொடைகளை ஏற்பது குறித்து கலந்துரையாடும் நோக்கத்தில், முழுமையாய் வாழ்தல் 2016 என்ற தலைப்பில், வரும் வாரத்தில் வத்திக்கானில் கருத்தரங்கு ஒன்று நடைபெறவுள்ளது.

திருப்பீட கலாச்சார அவை, கெய்ரோஸ் அமைப்போடு சேர்ந்து நடத்தும் இக்கருத்தரங்கு, இம்மாதம் 23 முதல் 26 வரை  நடைபெறவுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் வாழ்கின்ற கலாச்சாரத்திலும், மதத்திலும், அவர்களின் வாழ்வைச் சிறப்பித்து, அவர்களின் கலாச்சாரச் சூழலில் மாற்றுத்திறன் இறையியல் படிப்பை ஆரம்பிக்கும் நோக்கத்தையும் இக்கருத்தரங்கு கொண்டிருக்கின்றது.

உரோம் நகரில் அண்மையில் வெற்றிகரமாக நடந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோர் யூபிலி விழாவைத் தொடர்ந்து, அம்மக்களின் வாழ்வைப் போற்றும் விதமாக, ஜூன் 23 முதல் 26 வரை உரோம் நகரில் இக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.